அடேங்கப்பா..இத்தனை விஷயங்களை கணிச்சிருக்காரே வெங்கட் பிரபு! 'கோட்' படத்தின் வைரல் மீமை பகிர்ந்த பிரேம்ஜி
செய்தி முன்னோட்டம்
கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான 'கோட்' திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சி, தமிழக அரசியல் மாற்றங்களுடன் பொருந்திப் போவதால் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. படத்தில் இடம்பெற்ற கார் நம்பர் பிளேட் குறியீடு தற்போது நிஜமாகியுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோர் இது குறித்த மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்களின் ரியாக்ஷன்களை வெளிப்படுத்தியுள்ளனர். இது இணையவாசிகளிடையே மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
நம்பர் பிளேட்
'TN 07 CM 2026' நம்பர் பிளேட் ரகசியம்
தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர்-அரசியல்வாதி சி. ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சூழலில், 'கோட்' படத்தில் விஜய் ஓட்டும் காரின் நம்பர் பிளேட்டில் 'TN 07 CM 2026' என்று எழுதப்பட்டிருந்த பழைய வீடியோ கிளிப் தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 2026-ஆம் ஆண்டு விஜய் முதல்வராவார் என்பதை வெங்கட் பிரபு அப்போதே கணித்துவிட்டதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். அண்மையில் வெங்கட் பிரபு இந்த அசல் நம்பர் பிளேட்டை நேரில் சென்று முதலமைச்சர் விஜய்க்கு பரிசாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி அமரன், படத்தில் இடம்பெற்ற தற்செயலான ஒற்றுமைகளைத் தொகுத்து ஒரு சுவாரசியமான மீமைப் பகிர்ந்துள்ளார்.
பிரேம்ஜி
அண்ணனின் தீர்க்கதரிசனத்தை வியந்த பிரேம்ஜி
"எங்க அண்ணன் வெறும் கார் நம்பர் பிளேட்டை மட்டும் கணிக்கவில்லை, ஒட்டுமொத்த அரசியலையும் கணித்து வைத்துள்ளார்" என்று பிரேம்ஜி அதில் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் சின்னம் மற்றும் கொடி: 'கோட்' படத்தின் பாடலில் 'விசில்' முக்கிய அங்கமாகப் பயன்படுத்தப்பட்டது; தற்போது தவெக கட்சியின் சின்னமும் விசில். அதேபோல், 'மட்ட' பாடலில் த்ரிஷா அணிந்திருந்த மஞ்சள் நிற சேலையும், சிவப்பு வளையல்களும் தவெகவின் கொடி நிறத்தை(மஞ்சள்-சிவப்பு) பிரதிபலிப்பது போல் உள்ளது. படத்தில் விஜய் கோட் சூட் உடையில் வருவது போலவே, தற்போதைய முதல்வர் விஜய்யும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் கருப்பு நிற சூட் உடையில் வலம் வருகிறார். மேலும், படத்தில் போக்குவரத்து காவலராக நடித்த நடிகர் தமிழன் பார்த்திபன், தற்போது தமிழக அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அன்றே கணித்தார் VP🔥🔥🔥 #TheGreatestOfAllTime #TheGOAT #Predictions #Manifestation @vp_offl 🔥🔥🔥 pic.twitter.com/0zCxCQL2Jp
— PREMGI (@Premgiamaren) May 22, 2026