Page Loader
பிரசாந்தின் அந்தகன் OTTயில் இந்த வாரம் ரிலீஸ்?
பிரசாந்தின் அந்தகன் OTTயில் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ்?

பிரசாந்தின் அந்தகன் OTTயில் இந்த வாரம் ரிலீஸ்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2024
09:23 am

செய்தி முன்னோட்டம்

டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக கம்பேக் தந்த படம் அந்தகன். இந்த திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. நீண்ட ஆண்டுகளாக தயாரிப்பில் இருப்பினும், இப்படம் வெளியான பின்னர் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படம் தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 31ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்தகன், ப்ரைம் வீடியோவில் வெளியாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தகன், பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தாதூண் என்ற ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக். இப்படம் தேசிய விருது பெற்றது மட்டுமின்றி, பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதற்கான தமிழ் உரிமையை தியாகராஜன் வாங்கி, பிரசாந்தை ஹீரோவாக வைத்து அந்தகன் என்ற பெயரில் இயக்கினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post