
சலார் திரைப்படம் INOX திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பிரபாஸ், பிரிதிவிராஜ் நடிப்பில், பிரஷாந்த் நீல் இயக்குள்ள திரைப்படம் 'சலார்'.
நாளை வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விட ஷாருக்கானின் 'டன்கி' படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதனால், ஒரு சில மாநிலங்களில், பிவிஆர்-ஐனாக்ஸ் மற்றும் மிராஜ் திரையரங்குகளில் தங்கள் படத்தை வெளியிடுவதில்லை என்று 'சாலார்' தயாரிப்பாளர்கள் முடிவு செய்ததாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது.
இதனை தொடர்ந்து இணையத்தில் ரசிகர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
'சலார்' தயாரிப்பாளர்களின் இந்த முடிவை, திரையரங்க உரிமையாளர்களும் ஆமோதித்ததாக செய்தி வெளியானது.
இந்த சூழலில், ஐநாக்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இணையத்தில் பரவிய செய்தி வெறும் வதந்தி எனவும், சலார் திரைப்படம், திட்டமிட்டபடி நாளை ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#PVRINOX to release #Salaar in its properties tomorrow Pan-India.. pic.twitter.com/Vgg9KTjK9R
— Ramesh Bala (@rameshlaus) December 21, 2023