Page Loader
தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்
இப்படத்தின் ரிலீஸ் குறித்து மௌனம் கலைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்

தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 08, 2024
04:40 pm

செய்தி முன்னோட்டம்

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தங்கலான்'. இப்படத்தின் ஷூட்டிங், போஸ்ட்-ப்ரொடக்ஷன் உள்ளிட்ட வேலைகள் நிறைவுற்றதை அடுத்து, படத்தின் ரிலீஸ் எப்போது என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து மௌனம் கலைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். அதன்படி, படம் ரிலீசுக்கு தயாராக உள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன், அதையொட்டி இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும், சென்சாருக்கான விண்ணப்ப நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். இதனிடையே விக்ரம் தனது அடுத்த படமான 'சீயான் 62' ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

தங்கலான் ரிலீஸ்