Page Loader
4 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் அஜித் பட ஹீரோயினின் திரைப்படம்
நடிகை வித்யா பாலன் தற்போது, கமல்ஹாசனுடன் ஒரு படம் நடிக்கப்போகிறார் எனவும் செய்திகள் தெரிவிக்கிறது

4 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் அஜித் பட ஹீரோயினின் திரைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
May 09, 2023
03:39 pm

செய்தி முன்னோட்டம்

2019-ஆம் ஆண்டு, நடிகர் அஜித் உடன், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தவர் வித்யா பாலன். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாவார். ஹிந்தி மொழியில் பல வெற்றி படங்களில் நடித்த இவர், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட 'டர்ட்டி பிக்ச்சர்' என்ற திரைப்படத்தில், சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. கொரோனா காலத்தில் அவர் நடித்த படங்கள் யாவும் ஓடிடி தளத்திலேயே வெளியானது. கடைசியாக அவர் நடித்து, திரையரங்கில் வெளியான திரைப்படம், 'மிஷன் மங்கள்'. படம் வெளியாகி கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவர் நடிப்பில் உருவாகி உள்ள 'நீயத்' என்ற திரைப்படம், வரும் ஜூலை 7-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

வித்யா பாலனின் புதிய படம்