Page Loader
தனுஷை தொடர்ந்து நயன்தாரா ஆவணப்படத்திற்கு மறுபடியும் சிக்கல்? 
நயன்தாரா ஆவணப்படத்திற்கு மறுபடியும் சிக்கல்

தனுஷை தொடர்ந்து நயன்தாரா ஆவணப்படத்திற்கு மறுபடியும் சிக்கல்? 

எழுதியவர் Venkatalakshmi V
Jan 06, 2025
02:27 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் சில மாதங்களுக்கு முன்னர் நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியானது. இப்படம் படம் வெளியாவதற்கு முன்னர் அதில் தான் சில காட்சிகள் பயன்படுத்த நினைத்ததாகவும், அதனை 'நானும் ரவுடி தான்' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் விரும்பாத காரணத்தால், தனக்கு NOC வழங்கவில்லை எனவும் 3 பக்க ஓபன் லெட்டர் ஒன்றை எழுதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதன் சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தற்போது மற்றுமொரு சட்ட சிக்கலில் நயன்தாராவும், ஆவணபட குழுவும் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படத்தில், சந்திரமுகி படத்தின் காட்சிகள் உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவகாரம்

தனுஷிற்கு ஓபன் லெட்டர் எழுதிய லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாரா, சமீபத்தில் தனது திருமணத்தை மற்றும் வாழ்க்கை பயணத்தை விளக்கும் ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டார். 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில், அவரது திரைப்பயணத்தில் முதல் படம் முதல் தற்போதைய படங்கள் ஆகியவற்றின் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, நயன்தாரா மற்றும் கணவர் விக்னேஷ் சிவன் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய "நானும் ரௌடி தான்" படத்தின் காட்சிகள் பெரும் பங்கு வகித்தது. காரணம், இப்படத்தின் மூலமாகவே அவர்கள் இருவரும் சந்தித்து, காதல் வயப்பட்டனர். இந்த ஆவணப்படத்தில் 'நானும் ரௌடி தான்' படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்காக அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் நயன்தாரா அனுமதி கோரியும் தனுஷ் அதற்கு பதிலளிக்காமல் இழுத்தடித்ததாக நயன்தாரா 3 பக்க ஓபன் லெட்டரை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

சந்திரமுகி 

தற்போது 'சந்திரமுகி' படத்தின் உரிமையை வைத்திருப்பவரும் வழக்கு?

நயன்தாரா தன்னுடைய திரைவாழ்க்கையின் தொடக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு ஆகியோருடன் இணைந்து பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை சிவாஜி ப்ரோடுக்ஷன்ஸ் சார்பாக ராம்குமார் தயாரித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அப்படத்தின் உரிமையை வைத்திருப்பவர், தன்னிடம் நயன்தாரா உரிய அனுமதி பெறாமல், ஆவணப்படத்தில் காட்சிகளை பயன்படுத்தியதாக அவர் மீதும், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தற்போது படத்தின் உரிமை யாரிடம் உள்ளது எனத்தெரியவில்லை.