Page Loader
சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் வெளியானது
அயலான் திரைப்படம் சயின்ஸ் பிரிக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் வெளியானது

எழுதியவர் Srinath r
Oct 06, 2023
07:12 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது. சயின்ஸ் பிரிக்ஷன் திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்பிரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோட்பாடி ஜே. ராஜேஷ், ஆர்.டி. ராஜா இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரஜினிகாந்தின் லால் சலாம், சுந்தர் சியின் அரண்மனை 4 உள்ளிட்ட திரைப்படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அயலான் டீசர் வெளியானது