Page Loader
ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய விவகாரம்: பாலிவுட் நடிகையின் பாடிகாட்டிற்கு Rs 10,500 அபராதம்
அனுஷ்காவின் பாடிகாட் சோனு ஷைக்கிற்கு Rs 10,500 அபராதம் விதித்துள்ளது மும்பை காவல்துறை

ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய விவகாரம்: பாலிவுட் நடிகையின் பாடிகாட்டிற்கு Rs 10,500 அபராதம்

எழுதியவர் Venkatalakshmi V
திருத்தியவர் Sayee Priyadarshini
May 17, 2023
03:39 pm

செய்தி முன்னோட்டம்

இரு தினங்களுக்கு முன்னர், பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சனும், அனுஷ்கா ஷர்மாவும், மும்பை நகரின் டிராபிக்கை தவிர்க்கவும், நேரத்திற்கு ஷூட்டிங் மற்றும் டப்பிங் செல்லவும், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற வீடியோக்கள் வைரலானது. அமிதாப் பச்சன், ரோட்டில் சென்ற ஒரு நபருடன் லிப்ட் கேட்டு ஏறி சென்றார். அனுஷ்கா ஷர்மாவோ, தன்னுடைய பாடிகாட்டுடன் பைக்கில் சென்றார். இந்த வீடியோ வைரலானதும்,நெட்டிஸின்கள் மும்பை காவல்துறையை கேள்வி எழுப்பினர். காரணம், மோட்டார் வாகன சட்டப்படி, பைக் ஓட்டுபவரும், பின் இருக்கையில் அமர்பவரும், ஹெல்மெட் அணிவது கட்டாயம். இந்த பிரபலங்கள் ஹெல்மெட் அணியாத காரணத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனக்கேட்கப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது அனுஷ்கா ஷர்மாவின் பாடிகாட்டிற்கு Rs.10,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Embed

Twitter Post

Challan has been issued under Sec 129/194(D), Sec 5/180 & Sec 3(1)181 MV act to the driver along with an fine of Rs. 10500 & been paid by the offender. https://t.co/aLp6JEstLO pic.twitter.com/Br0ByHZk4T— Mumbai Traffic Police (@MTPHereToHelp) May 16, 2023