
ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பயணித்த பாலிவுட் நடிகர்கள்; போலீஸ் கேஸ் பாயுமா?
செய்தி முன்னோட்டம்
நேற்று காலை, பாலிவுட் நடிகர், அமிதாப் பச்சன், மும்பையின் டிராபிக்கை தவிர்க்க, ரோட்டில் சென்ற ஒரு நபரிடம் லிப்ட் கேட்டு, பைக்கில் பயணித்ததாக ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தார்.
அது இணையத்தில் வைரலாக பரவியது.
தொடர்ந்து, மற்றொரு பாலிவுட் பிரபலமும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, டப்பிங் ஸ்டுடியோவிற்கு, தன்னுடைய பாடிகார்டுடன், பைக்கில் பயணித்ததாக கூறி, ஒரு வீடியோவை பதிவேற்றினார்.
அதைதொடர்ந்து, தற்போது ரசிகர்கள், மும்பை போலீசை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியா மோட்டார் வாகன சட்டப்படி, பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இந்த நடிகர்கள் இருவருமே, ஹெல்மெட் போடாமல் சென்றுள்ளனர்.
ரசிகர்கள் கேள்வி கேட்டதும், மும்பை போலீஸ், அவர்கள் நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்ததாகக்கூறியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஹெல்மெட் அணியாத அனுஷ்கா
We have shared this with traffic branch. @MTPHereToHelp
— मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) May 15, 2023