திரைப்படமாகும் டைட்டானிக் கப்பலுக்கு பயணம் மேற்கொண்ட டைட்டனின் கதை
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காண பயணம் மேற்கொண்டு வெடித்து சிதறிய டைட்டன் நீர் மூழ்கி கப்பலின் கதை திரைப்படமாக உருவாக இருக்கிறது. வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக்கின் உடைந்த பாகங்களை காணச்சென்ற ஓசோன்கேட் நிறுவனம் தயாரித்த 'டைட்டன்' என்ற சிறிய நீர்மூழ்கி கப்பல், கடந்த ஜூன் 18 ஆம் தேதி வெடித்து சிதறியது. இதில் பயணித்த ஓசன்கேட் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். தற்போது இந்த 'டைட்டனின்' கதை திரைப்படமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேம்ஸ் கேமரூன்
டைட்டனின் கதையை இ பிரையன் டாபின்ஸ் மற்றும் மைண்ட் ரைட் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் திரைப்படமாக தயாரிக்கின்றன. ஜஸ்டின் மேக்கிரிகோர் மற்றும் ஜொனாதன் கீசி எழுத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. டைட்டனின் கதையை வைத்து உருவாகும் முதல் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. டைட்டானிக் திரைப்படத்தின் இயக்குனரும், டைட்டானிக் கப்பல் குறித்து ஆராய்ந்து வருபவருமான இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இத்திரைப்படத்தை இயக்குவதாக வதந்திகள் ஆரம்பத்தில் பரவியது. ஆனால் அவர் தனது எக்ஸ் பதிவில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.