Page Loader
ஆதிபுருஷ் படத்தை காண வந்த ஹனுமார்! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ
வடமாநிலத்தில் படத்தை காண ஒரு சர்ப்ரிஸ் நபர் விசிட் அடித்துள்ளார்

ஆதிபுருஷ் படத்தை காண வந்த ஹனுமார்! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Jun 16, 2023
02:17 pm

செய்தி முன்னோட்டம்

பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் பாலிவுட் திரைப்படம் 'ஆதிபுருஷ்'. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், அதன் ட்ரைலர் வெளியான போதே, அதில் பயன்படுத்தப்பட்ட VFX காட்சிகளுக்காக விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனையடுத்து, படம் வெளியாகும் முன்னரே, படத்தின் தயாரிப்பாளர்கள், இந்த திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும், ராமபக்தரான அனுமாருக்கு ஒரு இருக்கை விடப்படும் என அறிவித்தனர். ராமரை தரிசிக்க அனுமார் வருவார் எனவும் கூறினார்கள். அவர்கள் அறிவித்தது போலவே, இன்று, வடமாநிலத்தில் 'ஆதிபுருஷ்' திரையிடப்பட்ட ஒரு தியேட்டருக்குள் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது. அதன் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் வேடிக்கையாக, திரையரங்கில் இருந்தவர்கள் எல்லாம், அந்த குரங்கை பார்த்ததும், 'ராமர்' கோஷமிட துவங்கி விட்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஆதிபுருஷ் படத்தை காணவந்த குரங்கு 

ட்விட்டர் அஞ்சல்

ஆதிபுருஷ் படத்தை காணவந்த குரங்கு