
எம்புரான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; மன்னிப்பு கேட்டார் நடிகர் மோகன்லால்
செய்தி முன்னோட்டம்
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது சமீபத்திய படமான எல்2: எம்புரான் தொடர்பான சர்ச்சை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், 2002 குஜராத் கலவரங்களை காட்டியவதாகக் கூறப்பட்டதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளால் படமும் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறமுடியாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், நடிகர் மோகன்லால், படத்தின் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த காட்சிகளால் வெடித்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு
மன்னிப்பு கோரிய நடிகர் மோகன்லால்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "ஒரு கலைஞராக, எனது திரைப்படங்கள் எந்த அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மதப் பிரிவையும் புண்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வது எனது கடமை. நானும் எம்புரான் குழுவினரும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
ரசிகர்களுடனான தனது ஆழமான பிணைப்பை மேலும் உறுதிப்படுத்திய மோகன்லால், அவர்களின் அன்பும் நம்பிக்கையும் தனக்கு மிகப்பெரிய பலம் என்பதை வலியுறுத்தினார்.
இதற்கிடையே, இந்த சர்ச்சை அரசியல் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னதாக, எம்புரான் திரைப்படக் குழுவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்து, படைப்பு சுதந்திரத்தை வலியுறுத்தினார்.