
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுகளுக்கு டோவினோ தாமஸின் '2018' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
செய்தி முன்னோட்டம்
ஆஸ்கர் விருதுகள் 2024க்கு இந்த ஆண்டு மே மாதம் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான '2018' பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஜூட் அந்தாணி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், வினித் சீனிவாசன், நரேன், லால் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம், கேரளாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை குறித்த படமாகும்.
இயக்குனரும் திரைப்படத் தேர்வு குழுவின் தலைவரான கிரீஸ் காசரவல்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், தி கேரளா ஸ்டோரி, ஆகஸ்ட் 16 1947 உள்ளிட்ட 22 படங்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும், அதில் காலநிலை மாற்றத்தை கருவாகக் கொண்ட '2018' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
'2018' திரைப்படம் சிறந்த சர்வதேச படத்திற்கான பிரிவில் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும்.
ட்விட்டர் அஞ்சல்
ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள '2018' திரைப்படம்
Malayalam film "2018- Everyone is a Hero" India's official entry for Oscars 2024: Film Federation of India
— Press Trust of India (@PTI_News) September 27, 2023