நடிகர் ஷாருக்கானுக்கு Y+ பிரிவு பாதுகாப்பு
ஹிந்தி படவுலகில் உள்ள நடிகர்-நடிகையருக்கு அவ்வப்போது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன. 90'களின் காலகட்டத்தில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரின் கூட்டாளிகள் இது போன்ற அச்சுறுத்தலில் ஈடுபட்டு வந்தனர். ஹிந்தி படவுலகில் அப்போது இருந்து பல பிரபல தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இடையில் இந்த அச்சுறுத்தல் இல்லாமலிருந்த நேரத்தில், தற்போது பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக அவர் மும்பை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பதான், ஜவான் போன்ற படங்களுக்கு பிறகு அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக புகாரளித்துள்ளார். இதனால், அவருக்கு மகாராஷ்டிரா அரசு, Y+ பிரிவு பாதுகாப்பு அளிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.