
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்
செய்தி முன்னோட்டம்
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட கோகைன் பயன்படுத்தியதற்காக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த ஜூன் 23ம் தேதி, கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஜூன் 26ம் தேதி, அதே வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் முதலில் சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமினுக்கு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீன்
நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் பின்வரும் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்க உத்தரவிட்டது: வழக்கின் புலனாய்வு அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் ரூ.10,000 மதிப்புள்ள சொந்த ஜாமினும், ரூ.10,000 மதிப்புள்ள இரண்டு நபர்களின் ஜாமினும் அளிக்க வேண்டும் மேலும், மறு உத்தரவு வரும் வரை இந்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.