Page Loader
திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம்

திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம்

எழுதியவர் Srinath r
Dec 22, 2023
05:06 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மானநஷ்ட வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து, வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் மாதம் வெளியான லியோ திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். அப்படத்தில், திரிஷாவுடன் நடித்தது குறித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை மன்சூர் பதிவு செய்திருந்தார். இதற்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், முதலில் மன்னிப்பு கேட்க மறுத்த மன்சூர், பின்னர் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி, திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து, மன்சூர் அலிகானுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.

2nd card

விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

அவர்கள் மூவரும் தெரிவித்த கருத்தால் தன் நட்பெயருக்கு களங்கம் நேர்ந்ததாக கூறி, அவர்களிடம் நஷ்டஈடு கேட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மன்சூர் மீது சில காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி மன்சூர் அலிகானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தும், அதை இரண்டு வாரங்களுக்குள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அதை எதிர்ப்பது மனித இயல்பு என தெரிவித்த நீதிமன்றம், இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காகவும், நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.