
ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கத்தில், லோகேஷ் மற்றும் அனிருத் நடிக்கப்போவதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற மாஸ் என்டர்டைனர் படங்களை தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்-ஐ வைத்து 'லியோ' படத்தை இயக்கியுள்ளார்.
படம் வெளியாகும் முன்னரே படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு இசையமைக்கவுள்ளது அனிருத் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லோகேஷ் மற்றும் அனிருத் இருவரும், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கப்போகும் படத்தில் நடிக்கவுள்ளனர் என்றும், இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது என்றும், அந்த படப்பிடிப்பு முடிந்ததும், 'தலைவர் 171' படப்பிடிப்பு துவங்கும் என்றும் இணையத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
Embed
அன்பறிவு இயக்கத்தில், லோகேஷ் மற்றும் அனிருத்
#LokeshKanagaraj and #AnirudhRavichander to star in an action film directed by #Anbariv. 💥💥#SunPictures will be producing the film. ⭐️ Shoot is expected to begin in October or November 2023. 🎥 Lokesh Kanagaraj will begin directing Super star's #Rajinikanth's next film... pic.twitter.com/t0PMuuklic— Trends Rockers (@TrendsRockers) September 12, 2023