லியோ சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்- யார் யார் என்னென்ன பேசினார்கள்?
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், நாயகி திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று இருந்த நிலையில், யார் யார் என்ன பேசினார்கள் என என்பதை இங்கு பார்ப்போம். இயக்குனர் மிஷ்கின்- வாழ்க்கையில் நான் புரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் என இரு லெஜெண்டுகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் விஜய் தான் நான் நேரில் பார்த்த முதல் லெஜண்ட். மேலும் விஜய்க்காக என் நெஞ்சை அறுத்துக் கொடுப்பேன் என பேசி ரசிகர்களை நெகிழ செய்தார்.
யார் யார் என்னென்ன பேசினார்கள்?
மன்சூர் அலிகான்- வழக்கம்போல் தன் பாணியில் ஜாலியாக பேசத் தொடங்கிய மன்சூர் அலிகான், திடீரென நடிகர் விஜயின் அரசியல் குறித்து பேச ஆரம்பித்தார். தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய் தான்.உங்களை நம்பித்தான் தமிழ்நாடே உள்ளது. விஜய் ரசிகர்களே நாளைய தீர்ப்பை எழுத தயாராகுங்கள் என மன்சூர் அலிகான், விஜய்க்காக அரசியல் அறைகூவல் விடுத்தார். அர்ஜுன்- பாலிடிக்ஸுக்கு நடிகர் விஜய் விரைவில் வருவார் என, விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கான அப்டேட்டை அர்ஜுன் வழங்கினார். மேலும் அவர், மக்களுக்கு நல்லது பண்ணனும் என்ற எண்ணம் இருந்தால் போதும், அது விஜய்யிடம் இருக்கிறது என்றார். அவர் அப்படி பேசிய உடனே, அர்ஜுனை பார்த்து விஜய் கைகூப்பி வணக்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
யார் யார் என்னென்ன பேசினார்கள்?
திரிஷா- இத்தனை வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜயுடன் நடிப்பது, பள்ளிப்பருவ தோழனை சந்தித்தது போன்று இருந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் லோகேஷ் கனகராஜை பார்த்து, இப்படத்தில் என்னை கொல்லாமல் விட்டதற்கு நன்றி என தெரிவித்த போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. இவ்வாறு வெற்றி விழாவில் பங்கேற்ற அனைத்து முக்கிய பிரமுகர்களும், விஜயின் அரசியல் வருகை குறித்த அப்டேட்டை வழங்கிய நிலையில், அவரும் அதை எவற்றையும் மறுக்காமல் தலைவணங்கி ஏற்றுக் கொண்டுள்ளது, 2026 ஆம் ஆண்டு அவரது அரசியல் வருகையை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது என்றே சொல்லலாம்.