Page Loader
மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள்
கோலிவுட் பிரபலங்கள் பலரின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது

மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 21, 2023
09:56 am

செய்தி முன்னோட்டம்

ட்விட்டர் நிறுவனத்தின் CEOவாக பதவி ஏற்ற பின்பு பல சர்ச்சையான மாற்றங்களை கொண்டுவந்தார் எலான் மஸ்க். அதில் ஒன்று தான், ப்ளூ டிக்கிற்கு மாத சந்தா. இந்தியா பயனாளர்கள், மாதந்தோறும் ரூ.900 செலுத்தி, ப்ளூ டிக் பெற்றுக்கொள்ளலாம் என்றும், கட்ட தவறியவர்கள் டிக் மார்க், ஏப்ரல் 20 அன்று நீக்கப்படும் என்றும் ஏற்கனவே அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பல திரைபிரபலங்களும், அரசியல்வாதிகளும், தெரிந்தோ, தெரியாமலோ மாத சந்தா கட்டவில்லை. அதனால், இரவோடு இரவாக, நேற்று அவர்களின் பரிசோதிக்கப்பட்ட ப்ளூ டிக் நீக்கப்பட்டது. காலை முதல், இணையத்தில், இந்த செய்திதான் வைரலாக பரவி வருகிறது. ரஜினிகாந்த், சிம்பு, தனுஷ் முதல் கீர்த்திசுரேஷ், சமந்தா என பலரின் டிக் நீக்கப்பட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

ப்ளூ டிக் நீக்கம்