கேளடி கண்மணி புகழ் குழந்தை நடிகை நீனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக உச்சம் தொட்டவர் நடிகை நீனா. இவர் முதன்முதலாக, 1990-ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கிய முதல் திரைப்படமான 'கேளடி கண்மணி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அவர் இப்போது எங்கே உள்ளார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?
நடிகை நீனா, திருமணத்திற்கு பிறகு, சினிமா துறையை விட்டு விலகி ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்டார்.
இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்.
இவரது கணவர் பெயர் செந்தில். அவர் மோனார்க் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணி செய்கிறார்.
கூடவே இவர் மெல்போர்னில் 'சித்தாரா இந்தியன் ரெஸ்டாரன்ட்' என்ற ஹோட்டலையும் நடத்தி வருகிறாராம்.
card 2
திரையுலகை விட்டு விலகிய நீனா
நீனாவும் செந்திலும் மார்ச் 18, 2004 அன்று சென்னையிலுள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி ஹாலில் திருமணம் செய்து கொண்டனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிறகு, நீனா, நீலா மாலா என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
அதன் பின்னர், தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்த அவர், அகத்தியன் இயக்கத்தில், கே.பாலசந்தரின் தயாரிப்பான விடுகதை (1997) என்ற படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார். இப்படத்தில் நீனாவின் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஒரு சில வருடங்களில் வெள்ளித்திரையை விட்டு விலகிய நீனா, சன் டிவியில் ஒளிபரப்பான 'சித்தி' சீரியலில் மீண்டும் பிரபலமானார்.