Page Loader
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு டிசம்பரில் திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு டிசம்பரில் திருமணமா?

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு டிசம்பரில் திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 19, 2024
11:08 am

செய்தி முன்னோட்டம்

நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வருண் தவானின் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். ஆண்டனி துபாயை சேர்ந்த தொழிலதிபர் என்றும், இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக நிலையான உறவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் கீர்த்திக்கும், ஆண்டனிக்கும் கோவாவில் டெஸ்டினேஷன் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அந்தந்த குடும்பத்தினரின் ஆசியுடன் இருமுறைப்படி திருமணம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது.

விவரங்கள்

மேலும் சில தகவல்கள்

கீர்த்தி சுரேஷின் திருமணம் அந்தந்த குடும்பத்தினரின் ஆசியுடன் இருமுறைப்படி நடக்கும் எனவும் கூறப்படுகிறது. கோவாவில் டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஆண்டனி தட்டிலும், கீர்த்தி சுரேஷும் ஒன்றாக பள்ளிக்குச் சென்றதாகவும், அவர்கள் உயர்நிலைப் பள்ளி காதலர்கள் என்றும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. கோவா திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் விருந்தினர் பட்டியல் இன்னும் வெளிவரவில்லை எனவும் இணைய செய்திகள் தெரிவிக்கின்றன. கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி அவ்வப்போது வதந்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. எனினும் இம்முறை இது வதந்தி அல்ல எனவும் கூறப்படுகிறது.