Page Loader
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' டீசர் வெளியானது
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகு தாத்தா ட்ரைலர் வெளியானது

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' டீசர் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Jan 12, 2024
09:04 am

செய்தி முன்னோட்டம்

'மாமன்னன்' படத்திற்கு பிறகு, கீர்த்தி சுரேஷ் தமிழில் நடித்து வரும் திரைப்படம், 'ரகு தாத்தா'. ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் டீஸர் இன்று காலை 9 மணி அளவில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கியுள்ளார். முன்னதாக சென்ற வாரம் 'ரகு தாத்தா' படத்தின் ப்ரோமோ ஒன்று வெளியானது. வெளியான சில மணி நேரத்தில் அது வைரலானது. பாக்யராஜ் திரைப்படமான, 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல ஹிந்தி வசனமான 'ரகு தாத்தா' என்பதை கொண்டு இந்த படம் உருவானது போல, அந்த ப்ரோமோ வீடியோ காட்டியது. அதன்படி, இப்படம் நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

'ரகு தாத்தா' டீசர்