Loading...
கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்: நெட்ஃப்ளிக்ஸில் எப்போது பார்க்கலாம்?
'டோரதி' திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது

கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்: நெட்ஃப்ளிக்ஸில் எப்போது பார்க்கலாம்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 08, 2026
01:13 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம் திரையரங்கங்களைத் தொடர்ந்து விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான 'டோரதி' கடந்த மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ரிஷி காந்த், சனந்த் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் படம் வெளியாவதற்கு முன்பே வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கணிசமாக அதிகரித்தன. இருப்பினும், படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் திரையரங்கு வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

டிஜிட்டல் உரிமம்

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி விவரம்

வசூலில் தொய்வு ஏற்பட்ட போதிலும், திரைப்படத்தின் உருவாக்கத்தையும், கதைக்களத்தையும் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

திரையரங்க வெளியீட்டைத் தொடர்ந்து 'டோரதி' திரைப்படம் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அடுத்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT