கார்த்தியின் 'சர்தார் 2' OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு: அமேசான் பிரைமில் எப்போது வெளியாகிறது?
செய்தி முன்னோட்டம்
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'சர்தார் 2' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், வெளியாகி வெறும் மூன்று வாரங்களிலேயே, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் பல மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. திரையரங்குகளில் 'மண்டாடி' திரைப்படத்துடன் போட்டியிட்டு எதிர்பார்த்த வசூலைப் பெறத் தவறிய நிலையில், இப்படம் தற்போது ஓடிடிக்கு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 ATTENTION: a new mission brief is in 👀🔥#Sardar2OnPrime, Oct 1st @Karthi_Offl @Prince_Pictures @Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69 @lakku76 pic.twitter.com/vTonM0UT8t
— prime video IN (@PrimeVideoIN) September 28, 2026
படக்குழு
நடிகர்கள் & தொழில்நுட்பக் குழு
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளனர்.
எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2022-இல் வெளியான 'சர்தார்' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவான இப்படம் குறித்து பேசிய கார்த்தி, "இந்த படத்திற்காக நாங்கள் எந்தக் குறையும் வைக்காமல் முழுமையாக உழைத்துள்ளோம்; ரசிகர்கள் மிகவும் ரசித்து மகிழும் வகையில் இயக்குனர் இதை உருவாக்கியுள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.