NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்?
    மக்களவைக்கு போட்டியிட தயாராக கங்கனா ரனாவத்.

    நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்?

    எழுதியவர் Srinath r
    Dec 20, 2023
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

    ஹிந்தி திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத், தமிழிலும் சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2, தாம் தூம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    தற்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமான எமர்ஜென்சி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

    இந்நிலையில், தொடர்ந்து சில ஆண்டுகளாகவே பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வந்த கங்கனா, தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

    2nd card

    கங்கனா தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்த அவரது தந்தை

    தற்போது அடுத்தாண்டு தேர்தலில், பாஜக சார்பில் கங்கனா போட்டியிடுவதை அவரது தந்தை அமர்தீப் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு உறுதி செய்துள்ளார்.

    இருப்பினும், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை, கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை கங்கனா ரனாவத் சந்தித்த பின்னர், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் பகுதியில் நடைபெற்ற, ஆர்எஸ்எஸ் முகாமில் பங்கேற்றார்.

    மேலும், அவரது கருத்துக்களும், ஆர்எஸ்எஸ் தத்துவமும் இணக்கமானவை என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    மண்டி மக்களவைத் தொகுதி அல்லது சண்டிகரில், கங்கனா போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    அரசியலில் கால் பதிக்கும் கங்கனா 

    Superstar Kangana Ranaut is all set to launch her political career by contesting 2024 elections next year.

    Her father, Amardeep Ranaut said that Kangana will contest exclusively on BJP ticket 🔥🔥

    The revelation follows a recent meeting between Kangana Ranaut and BJP's National… pic.twitter.com/YS62u5y4QN

    — Times Algebra (@TimesAlgebraIND) December 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    பாலிவுட்
    சந்திரமுகி 2
    ஜெயலலிதா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    பாஜக

    உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு  ராஜஸ்தான்
    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை நாடாளுமன்றம்
    தீபாவளியை அடுத்து டெல்லி காற்று மாசுபாடு கடுமையானதாக மாறியது  டெல்லி
    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி

    பாலிவுட்

    இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் லியோ
    ஜப்பான் முதல் தி மார்வெல்ஸ் வரை- தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு நடிகர்
    இந்த வருட தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு நடுவர்கள் இவர்களா? ஆஸ்திரேலியா
    'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் தீபிகா-ரன்வீர் பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் என்ன? தீபிகா படுகோன்

    சந்திரமுகி 2

    சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத் ரஜினிகாந்த்
    'சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு நான் தான்டா' - நடிகர் வடிவேலுவின் டப்பிங் வீடியோ  ரஜினிகாந்த்
    'சந்திரமுகி 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு  ரஜினிகாந்த்
    வெளியானது 'சந்திரமுகி 2' படத்தின் ட்ரைலர் ட்ரைலர்

    ஜெயலலிதா

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு ஜெயலலிதா
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஓ.பன்னீர் செல்வம்
    ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாஜக அண்ணாமலை
    வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025