
கமல்ஹாசனின் இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 உருவாக உள்ளது.
கமல்ஹாசன் உடன் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது வெளியாகி உள்ள இந்த இன்ட்ரோ வீடியோவை, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலியும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் வெளியிட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வெளியானது
Vanakkam India 🙏🏻 INDIAN IS BACK 🫡
— Lyca Productions (@LycaProductions) November 3, 2023
Presenting INDIAN-2 AN INTRO 🤞🏻 https://t.co/NAtRnrfZmB#Indian2 🇮🇳
🌟 #Ulaganayagan @ikamalhaasan
🎬 @shankarshanmugh
🎶 @anirudhofficial
📽️ @dop_ravivarman
✂️🎞️ @sreekar_prasad
🛠️ @muthurajthangvl
🌟 #Siddharth @MsKajalAggarwal @Rakulpreet… pic.twitter.com/QiGHh2S8Xf