
அதிக சம்பளம் கேட்டதால் பிரதீப் ரங்கநாதனை கைவிட்ட கமல்?
செய்தி முன்னோட்டம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லவ் டுடே திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பதாகவும், இப்படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாகவும் சொல்லப்பட்டது.
படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதன் ₹20 கோடி சம்பளம் கேட்டதால், கமலின் தயாரிப்பு நிறுவனம் படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
தான் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்திற்கு, ₹1 கோடி மட்டுமே சம்பளமாக பெற்ற பிரதீப், தனது அடுத்த படத்திற்கு ₹20 கோடி கேட்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2nd card
விக்னேஷ் சிவனின் கை நழுவும் பெரிய ஹீரோக்களின் படங்கள்
சிலம்பரசன் நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், தற்போது வரை ஐந்து படங்களை இயக்கியுள்ளார்.
ஐந்து படங்களும் வெற்றி பெற்ற நிலையில், ஆறாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில். நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.
இந்நிலையில், சில காரணங்களால் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக, மகிழ் திருமேனி அப்படத்தை இயக்குகிறார்.
மேலும், பிரதீப் ரங்கநாதனின் படம் மூலம் கமலுடன் இணையும் வாய்ப்பை விக்னேஷ் சிவன் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வாய்ப்பும் கைநழுவி விட்டது.
3rd card
விக்னேஷ் சிவன் படத்தில் இணையும் எஸ் ஜே சூர்யா?
விக்னேஷ் சிவன்-பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைய எஸ்ஜே சூர்யாவிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக திரை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
S.J.சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள்X படத்தை, விக்னேஷ் சிவன் பாராட்டியிருந்த நிலையில், இந்த தகவல் கசிந்துள்ளது.
மேலும் இப்படம் குறித்த தகவல்களை பட குழு ரகசியமாக வைத்துள்ள நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.