
'கல்கி 2898AD' ட்ரைலர் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
பிரபாஸ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ள 'கல்கி 2898' திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
வரும் ஜூன் 27ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ட்ரைலர், ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அறிவியல் புனைக்கதை பாணியில், அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காகவும் படக்குழுவினர் அதிக செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் இந்த காவிய கதையின் தொடர்ச்சியில் முதல் பாகத்தில் ஒரு சுருக்கமான தோற்றத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறார்.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
'கல்கி 2898AD' ட்ரைலர்
REBEL STORM LOADING #Kalki2898AD #Kalki2898ADTrailerOnJune10th #Prabhas
— Darling Abhi ❤💥 (@DarlingSalaar23) June 5, 2024
Kalki 2898 AD is a futuristic Movie set in 2898 AD in India
It's a Mythological -Dystopian Science Fiction Movie
Releasing worldwide from 27th June,2024
It's trailer is releasing on 10th June,2024 pic.twitter.com/lhpeVtJy7N