LOADING...
மீண்டும் மாதவனுடன் இணையும் ஜோதிகா, ஆனால் தமிழ் படத்தில் அல்ல!
25 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ஜோதிகா நடிக்கிறார். அதோடு, மாதவன்-ஜோதிகா இணையும் 4 படம் இது

மீண்டும் மாதவனுடன் இணையும் ஜோதிகா, ஆனால் தமிழ் படத்தில் அல்ல!

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2023
02:35 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்தபின்னர் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார். இரு குழந்தைகள் பிறந்த பின்னர், மீண்டும் நடிக்க துவங்கிய அவர், நடிப்பிற்கு சவால் விடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இதற்கிடையே, மும்பை சென்று செட்டில் ஆகிவிட்டார் ஜோதிகா. பிள்ளைகள் படிப்பு, குடும்ப பிரச்னை காரணமாக அங்கே சென்றார் எனவும் கூறப்பட்டது. இதற்கிடையே, தன்னுடைய ஒர்க்அவுட் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவேற்றினார். தான் பழைய பார்மிற்கு வந்துவிட்டதை குறிப்பால் உணர்த்திய அவர், தற்போது, மாதவனுடன் ஒரு படத்தில் இணைய போகிறார் என செய்திகள் வந்துள்ளது. இந்த திரைப்படத்தை விகாஸ் பாய் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம், 25 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ரீஎன்ட்ரி தரப்போகிறார் ஜோதிகா.

ட்விட்டர் அஞ்சல்

பாலிவுட்டில் ரீஎன்ட்ரி ஆகும் ஜோதிகா