'ஜிகர்தண்டா டபுள்X' ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின், ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 8ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பாராட்டி இருந்த நிலையில், எஸ்.ஜே சூர்யாவை 'தற்கால நடிகவேள்' என அவர் புகழ்ந்திருந்தார். இத்திரைப்படம் இதுவரை ₹60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மூன்று வாரமாக தொடர்ந்து திரையரங்குகளில் ஜிகர்தண்டா டபுள்X ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.