
விவாகரத்து குறித்து மனம் திறந்த ஆர்த்தி: தன்னுடைய ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்ட முடிவு என ஜெயம் ரவி மீது மனைவி குற்றசாட்டு
செய்தி முன்னோட்டம்
இரண்டு தினங்களுக்கு முன்னர் தன்னுடைய திருமண விவாகரத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜெயம் ரவி.
நீண்ட ஆலோசனைக்கு பின்னர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவது என தான் முடிவெடுத்துள்ளதாக ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.
தன்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த விவாகரத்து முடிவு ஒரு சார்பாக எடுக்கப்பட்டது என்றும், தன்னுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்றும், குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஜெயம் ரவியுடன் இது குறித்து பேச முற்படும் போதெல்லாம் தன்னை அவர் சந்திக்க மறுத்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Clarification statement from #AartiRavi pic.twitter.com/RuhljdYZqP
— Nikil Murukan (@onlynikil) September 11, 2024