Page Loader
ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி விவாகரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
விவாகரத்து செய்தி ஜெயம் ரவியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி விவாகரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2024
12:35 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ஜெயம் ரவி, தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார். பல நாட்களாக வதந்தியாக உலவி வந்த இந்த விவாகரத்து தகவல், தற்போது ஜெயம் ரவி மூலமாக உறுதி செய்யப்பட்டது, அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி ஜோடி பல ஆண்டுகளாக காதலித்த பின்னர், மனம் ஒத்து திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவருக்கும், ஆர்த்திக்கும் மனக்கசப்பு இருக்கிறது என செய்தி வெளியான தருணத்தில், ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் இவர்கள் ஜோடியாக இருந்த புகைப்படங்களை நீக்கி அதை கிட்டத்தட்ட உறுதி செய்தார் என்பது தான் இந்த விவாகரத்து செய்திக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது .

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவாகரத்து 

கோலிவுட்டில் தொடரும் விவாகரத்துகள்

திருமண முறிவு பலரின் வாழ்க்கையிலும் நடைபெற்றாலும், அது நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நடக்கும் போது ரசிகர்களுக்கு அது கூடுதல் அதிர்ச்சியையே தருகிறது. தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் பிரிந்தது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்வார்கள் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மிக சமீபத்தில் G.V.பிரகாஷ்-சைந்தவி ஜோடியும் தங்கள் பிரிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். தற்போது அந்த வரிசையில் ஜெயம் ரவி- ஆர்த்தி தங்கள் திருமண முறிவை அறிவித்துள்ளனர். இவர்கள் கடந்த 2009 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆர்த்தியின் தாய் சுஜாதா விஜயகுமார் திரைப்பட தயாரிப்பாளர் என்பதும், ஜெயம் ரவியின் பல படங்கள் அவரின் தயாரிப்பில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.