ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் இயக்குனர் அட்லீ, முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமான திரைப்படமான 'ஜவான்' முதல்நாளே அமோக வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது.
நிச்சயமாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் இந்த திரைப்படம் என பலரும் ஆருடம் கூறிவரும் நிலையில், இந்த படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது இருக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜவான் திரைப்படம் வெளியாகி ஒரு நாளே ஆன நிலையில், இந்த திரைப்படம், வரும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகலாம் என்றும், ஏற்கனவே இந்த திரைப்படத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திடம் விற்கப்பட்ட நிலையில், அதனுடன் சேர்த்து மேலும் ஒரு தளத்தில் இந்த திரைப்படம் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
card 2
'பதான்' படத்தின் முதல்நாள் வசூலினை முறியடித்த 'ஜவான்'
'ஜவான்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இந்தியில் மட்டும் ரூ.65.50 கோடி என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழில் ரூ.6.41கோடியும், தெலுங்கில் ரூ.5.29 கோடியும் வசூலாகியுள்ளது என்றும், இந்தியாவில் மொத்தம் ரூ.72.46 கோடி வசூலினை இப்படம் ஈட்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதிரடி மற்றும் த்ரில்லர் கதைக்களத்தினை இப்படம் இந்திய மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. ஒவ்வொரு காட்சியமைப்பிலும் இதுவரை இல்லாத அளவில் இப்படத்தில் பல தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
முன்னதாக ஷாருக்கான் நடித்து மிகப்பெரிய ஹிட்டான 'பதான்' படத்தின் முதல்நாள் வசூலினை 'ஜவான்' திரைப்படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.