
தேவரா பட விழாவில் கொஞ்சு தமிழில் பேசி அசத்திய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்
செய்தி முன்னோட்டம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முதன்முறையாக தென்னிந்திய மொழியில் நடித்துள்ளார் திரைப்படம் 'தேவரா'.
ஜூனியர் NTR உடன் நடிக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ் ரகம்.
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
அதில் படத்தின் நாயகன் ஜூனியர் NTR, அனிருத், ஜான்வி கபூர், படத்தின் இயக்குனர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஜான்வி, யாரும் எதிர்பாராத விதமாக கொஞ்சும் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
சென்னை என்றாலே தன்னுடைய தாய் உடன் தான் இருந்த மகிழ்ச்சியான நாட்களே நினைவிற்கு வருகிறது என்றும் அவர் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
ஜான்வி கபூர்
#JanhviKapoor's Speech in #Devara Pre-Release Event.
— Filmy Fanatic (@FanaticFilmy) September 18, 2024
Her speaking Tamil is so good 🤩 pic.twitter.com/OobsMHr0CJ
வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜூனியர் NTR
இதைத்தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜூனியர் NTR, தனக்கு பிடித்த இயக்குனர் வெற்றிமாறன் எனத்தெரிவித்தார்.
அதோடு, நேரடியாக ஒரு தமிழ் படம் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் எனவும், அதனை வேண்டுமென்றால் தெலுங்கில் டப்பிங் செய்து கொள்ளலாம் எனவும் கூறினார்.
அவரின் இந்த பதிலால் அரங்கம் அதிர்ந்தது. ஜூனியர் NTR கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி உலக புகழ் அடைந்த RRR திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அவர் நடித்துள்ள தேவரா திரைப்படம் ஒரு மீனவ சமூதாயத்தை பற்றிய கதை. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வில்லனாக நடிக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Jr NTR shows Greenflag to be directed under #Vetrimaran. He wish to do a full tamil film with him
— creator Space💜🔆🌸 (@ArunB97) September 18, 2024
I hope this duo can work as Dhanush and vetrimaran combo!!#DEVARA pic.twitter.com/1vEwydOxyr