
மதுபோதையில் போலீசிடம் சிக்கிய 'ஜெயிலர்' பட வில்லன் விநாயகன்?
செய்தி முன்னோட்டம்
'ஜெயிலர்' திரைப்படத்தில், வர்மா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் விநாயகன். இவர் மலையாளத்தில் பிரபல நடிகராக அறியப்படுபவர்.
தமிழில் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார், குறிப்பாக 'திமிரு' படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின்னர், நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்திருந்தார்.
அவர், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், குடிபோதையில் வண்டி ஒட்டி, தகராறு செய்ததாகவும், அதற்காக காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்நிலையம் கொண்டு செல்வது போல ஒரு வீடியோ நேற்றிரவு வைரலாக பகிரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், தகராறு செய்தமைக்காகவும், அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், இது படத்தின் ஷூட்டிங் என்று விநாயகனின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
போலீசிடம் சிக்கிய ஜெயிலர் பட வில்லன் விநாயகன்?
என்ன சாரே... மதுபோதையில் காவல்நிலையத்தில் தகராறு செய்ததாக ஜெயிலர் பட நடிகர் விநாயகன் போலீசாரால் கைது.. சோகத்துடன் கையை கட்டி நிற்கும் காட்சிகள் #Kerala #ActorVinayakan #Drunked #Police #Arrested pic.twitter.com/mJLgVqwGij
— Polimer News (@polimernews) October 25, 2023