Page Loader
525 கோடி தாண்டி வசூல் ஈட்டி வரும் 'ஜெயிலர்' திரைப்படம்
வசூல் ஈட்டி வரும் 'ஜெயிலர்' திரைப்படம்

525 கோடி தாண்டி வசூல் ஈட்டி வரும் 'ஜெயிலர்' திரைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 25, 2023
04:26 pm

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்தின், 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி இன்றோடு மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ளது. படம் வெளியாகும் முன்னரே, படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. அதற்கு காரணம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி, அதில் நடித்திருந்த நடிகர்கள் பட்டாளமும் தான். அவர்களை இயக்குனர் நெல்சன் தன்னுடைய ஸ்டைலில் இருந்து விலகாமல் எப்படி திரையில் வெளிப்படுத்தியிருப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கூடுதலாக, அனிருத் இசையில் வெளியான பாடல்கள் கூடுதலாக எதிர்பார்ப்பை கிளப்ப, படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் படம் ஹவுஸ்ஃபுல் ஆனது. திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில், தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக, ₹375.40 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், மூன்றாவது வாரத்தில் ₹525 கோடி தாண்டி வசூல் ஆகியுள்ளது என அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர் தரப்பு தற்போது அறிவித்துள்ளது.