ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 15 மீண்டும் திரையரங்கில் முத்துவேல் பாண்டியன்!
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களைத் தற்பொழுதே தொடங்கியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Embed
Alappara Kelappurom! #Jailer2 storms into theatres worldwide on October 15 🔥 #Jailer2FromOct15 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren @kabilanchelliah @RIAZtheboss pic.twitter.com/mY50qNOSQh
— Sun Pictures (@sunpictures) July 2, 2026
முத்துவேல் பாண்டியன்
டார்க் காமெடி திரைப்படம்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான முதல் பாகம், பாக்ஸ் ஆபீஸில் பல நூறு கோடிகளை அள்ளிக்குவித்து சாதனை படைத்தது. அதே பாணியில், இரண்டாம் பாகத்திலும் முத்துவேல் பாண்டியனின் அதிரடி மற்றும் டார்க் காமெடி கலந்த மாஸ் எலிமெண்ட்டுகள் பல மடங்கு கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் ஹுகும் பாடல் உலகளவில் ட்ரெண்டானதைப் போல, இந்த இரண்டாம் பாகத்தின் பாடல்களும், பின்னணி இசையும் தற்பொழுதே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.