Page Loader
இளையராஜாவின் புதுச்சேரி கச்சேரி ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு
சமீபத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் புதுச்சேரி கச்சேரி ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு

எழுதியவர் Srinath r
Oct 19, 2023
06:30 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசைக்கச்சேரி வரும் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த இசை கச்சேரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சேரிக்கான டிக்கெட் முன்பதிவு தலங்களான, 'புக்மைஷோ', 'பேடிஎம் இன்சைடர்' உள்ளிட்டவற்றில் கச்சேரி ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசைக்கச்சேரி ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இசைஞானி இளையராஜாவின் கச்சேரி ரத்து செய்யப்படுவது இது ஒன்றும் புதிதல்ல. கடந்தாண்டு நவம்பர் மாதம் துபாயில் நடைபெற இருந்த இவர் கச்சேரிக்கு, டிக்கெட்டுகள் பெரிய அளவில் விற்பனையாகாததால் கச்சேரி ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. தேனி மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் பிறந்த இளையராஜா, மூன்று தசாப்தங்களுக்கு தன் இசையால் தமிழ் திரையுலகை ஆண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இளையராஜாவின் புதுச்சேரி கச்சேரி ரத்து