"ஜிகர்தண்டா XX ஒரு குறிஞ்சி மலர்": சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு
சென்ற வாரம், தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா XX . இந்த படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரை நட்சத்திரங்கள் பலரும் இந்த திரைப்படத்தை பற்றி புகழ்ந்து வருகின்றனர். அனைவருமே இந்த திரைப்படத்தை பற்றி நேர்மறை விமர்சனத்தை தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தன் கைப்பட எழுதிய பாராட்டு கடிதத்தை, கார்த்திக் சுப்புராஜிற்கு அனுப்பி உள்ளார். இதன் புகைப்படத்தை, கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், "ஜிகர்தண்டா டபுள் X ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு." என்றும், "I am proud of you கார்த்திக் சுப்புராஜ்" எனவும் புகழ்ந்துள்ளார்.