ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது
செய்தி முன்னோட்டம்
'வேட்டையனின்' முதல் பாடலான 'மனசிலாயோ' வெற்றியைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் படத்தின் இரண்டாவது பாடலான ஹண்டர் வண்டார் பாடலை இன்று வெளியிட்டார்.
சித்தார்த் பஸ்ரூரால் குரலில், அறிவு எழுதிய பாடல் வரிகளுடன், ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் சக்தியைக் கொண்டாடுகிறது இந்த பாடல்.
செம வைபாக இருக்கும் இந்த பாடல் நிச்சயம் சூப்பர்ஸ்டாரின் புகழ் பாடும் ஒரு டைனமிக் டிராக் ஆகும்.
மேலும் இது படத்தில் ஒரு முக்கிய காட்சியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#HunterVantaar - https://t.co/sNevze1e14
— Anirudh Ravichander (@anirudhofficial) September 20, 2024
🔥🔥🔥🥁🥁🥁🎉🎉🎉
#Vettaiyan
Superstar @rajinikanth 🫡🫡🫡@tjgnan @LycaProductions @SonyMusicSouth
🎤 @siddharthbasrur ⚡️
🖋️ @Arivubeing ⚡️
இசை வெளியீடு
வேட்டையன் இசை வெளியீடு
'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜவர்ஹர்லால் உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை, செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் வி.ஜே.ரக்ஷன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் மீண்டும் இணையும் இப்படத்தின் மீது நாடு முழுவதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கூடுதலாக இது அமிதாப்பின் முதல் நேரடி தமிழ் படமாகும்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 'வேட்டையன்' அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.