Page Loader
பத்மஸ்ரீ விருது பெற்ற மகா நடிகர் அசோக் சரஃப்; இவரின் பின்னணி என்ன?
பத்மஸ்ரீ விருது பெற்ற மகா நடிகர் அசோக் சரஃப்

பத்மஸ்ரீ விருது பெற்ற மகா நடிகர் அசோக் சரஃப்; இவரின் பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 30, 2025
09:39 am

செய்தி முன்னோட்டம்

இந்திய சினிமாவில் பல கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். தங்கள் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான் அசோக் சரஃப். அசோக் சரஃப் 4 தசாப்தங்களுக்கும் மேலாக மராத்தி மொழி படங்கள் மற்றும் சீரியல்கள் மற்றும் பாலிவுட் திரைப்படத் துறையில் நடிகராக முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். இந்த காலத்தில், அவர் வித்தியாசமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களை முழுவதுமாக மகிழ்வித்தார், மேலும் தீவிரமான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் மராத்தியில் மகா நடிகர் என போற்றபப்டுகிறார். அசோக் சரஃப் திரைப்படத் துறையில் அவரது பாராட்டத்தக்க பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது பெற்றார்.

பாலிவுட்

பாலிவுட் படங்களில் பலதரப்பட்ட பாத்திரங்கள்

இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றதற்கு நடிகர் அசோக் சரஃப் மகிழ்ச்சி தெரிவித்தார். மகாராஷ்டிர பூஷன் விருதுக்குப் பிறகு தற்போது பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். அசோக் சரஃப் தனது கேரியரில் பல படங்களில் நடித்துள்ளார். தாமத், புல்வாரி, முத்தாத், சிவசக்தி, கர் கர் கி கஹானி, ஆ காலே லக் ஜா, கரன் அர்ஜுன், குட்டு, கோலா, யெஸ் பாஸ், கூப்சுரத், பந்தன், ஜோரு கா குலாம், இத்தேஃபாக், இன்டேகம், சிங்கம் மற்றும் வேத் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். பாலிவுட் படங்களில் பல்துறை வேடங்களில் நடித்து மக்களை மகிழ்விப்பதில் வெற்றி பெற்றுள்ளார். 77 வயதிலும் மராத்தி நாடக அரங்கில் ஒரு சக்தியாக திகழ்கிறார்.