
சரியாக ஒருவருட இடைவெளி; ஒரே நாளில் மரணமடைந்த ஹாரி பாட்டர் பட நடிகர்கள்
செய்தி முன்னோட்டம்
ஹாரி பாட்டர் படங்கள் மற்றும் டோவ்ன்டன் அபே ஆகியவற்றில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகை டேம் மேகி ஸ்மித் உடலநலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 89.
டேம் மேகி ஸ்மித்தின் மகன்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஒருஅறிக்கையில் , "வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அதிகாலை மருத்துவமனையில் அவர் காலமானார்.
தீவிரமான தனிப்பட்ட நபரான அவர் இறுதியில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருந்தார்." என்று தெரிவித்துள்ளனர்.
50 ஆண்டுகளுக்கும் மேலான நடிப்புத் தொழிலில், மேகி ஸ்மித் 1969இல் தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடிக்காக ஆஸ்கார் விருதை வென்றார்.
பின்னர் 1978இல் கலிபோர்னியா சூட் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை மீண்டும் வென்றார்.
ஹாரி பாட்டர்
ஹாரி பாட்டர் படங்கள் மூலம் கிடைத்த புகழ்
"ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன்" மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான ஹாரி பாட்டர் சீரீஸ்களில் கடுமையான மற்றும் நியாயமான மாந்திரீக ஆசிரியரான மினெர்வா மெகோனகல்லாக வந்து இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, மேகி ஸ்மித் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார்.
ஸ்மித் 1990இல் பிரிட்டன் அரச குடும்பம் அந்நாட்டில் புகழ்பெற்ற பெண்களுக்கு வழங்கும் டேம் கமாண்டர் பட்டம் பெற்றார். அதன் பிறகு அவர் டேம் மேகி ஸ்மித் என்று குறிப்பிடப்பட்டார்.
சுவாரஸ்யமாக, ஹாரி பாட்டர் படத்தில் புரஃபஸர் டம்பில்டோராக நடித்த மைக்கேல் காம்பன் இறந்து சரியாக ஒருவருடம் கழித்து அதேநாளில் மேகி ஸ்மித்தும் இறந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஹாரி பாட்டரின் டம்பில்டோர் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதே நாளில் மேகி ஸ்மித்தும் இறந்தார்
— Thanthi TV (@ThanthiTV) September 28, 2024
RIP DUMBLEDOOR September 27, 2023
RIP MCGONAGALL September 27, 2024#HarryPotter #Dumbledore #MaggieSmith #ThanthiTV pic.twitter.com/9pfdUEgOF0