ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், இந்த மாத துவக்கத்தில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'. இந்த படம், ரசிகர்களிடத்திலும், சினிமா விமர்சகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. பார்க்கிங் திரைப்படம் வெளியாகி 28 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி (டிசம்பர் 30) அதாவது நாளைய தினம், 'பார்க்கிங்' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில், ஹரிஷ் கல்யாணுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ளார். மேலும், ஹரிஷ் கல்யாணிற்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆவர்.