Loading...
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வாழ்நாள் வசூலை 24 மணி நேரத்தில் முறியடித்த GTA VI: $3.79 பில்லியன் வசூலுடன் உலக சாதனை
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வாழ்நாள் வசூலை 24 மணி நேரத்தில் முறியடித்தது GTA VI

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வாழ்நாள் வசூலை 24 மணி நேரத்தில் முறியடித்த GTA VI: $3.79 பில்லியன் வசூலுடன் உலக சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2026
05:42 pm

செய்தி முன்னோட்டம்

பத்து ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பிற்குப் பிறகு வெளியாகியுள்ள கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI வீடியோ கேம் முதல் 24 மணி நேரத்திலேயே $3.79 பில்லியன் விற்பனை வருவாயை ஈட்டி உலக பொழுதுபோக்கு வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் இந்த ஆன்லைன் கேம் வெளியீட்டிற்கு முன்பே 32.5 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் 2013 ஆம் ஆண்டு ஜிடிஏ 5 முதல் நாளில் ஈட்டிய $800 மில்லியன் சாதனையையும் இது முறியடித்துள்ளது. மேலும் ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஈட்டிய $2.94 பில்லியன் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் ஜிடிஏ 6 ஒரே நாளில் கடந்துள்ளது.

வைஸ் சிட்டி

13 ஆண்டுகளுக்குப் பிறகு லூசியா மற்றும் ஜேசனுடன் வைஸ் சிட்டிக்குத் திரும்பிய ரசிகர்கள்

ஜிடிஏ 5 வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு லூசியா மற்றும் ஜேசன் ஆகிய இரு முதன்மைக் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு ஜிடிஏ 6 உருவாக்கப்பட்டுள்ளது.

மியாமி நகரை அடிப்படையாகக் கொண்ட வண்ணமயமான மற்றும் ஆபத்தான வைஸ் சிட்டி பின்னணியில் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர் சாம் ஹவுசர் உலகளாவிய வீரர்களின் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ளதோடு இது நிறுவனத்தின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேம் வெளியானதைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு விளையாடி வருவது இதன் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

$1 பில்லியன் தயாரிப்புச் செலவு

$1 பில்லியன் தயாரிப்புச் செலவும் நெட்ஃபிளிக்ஸ் டிரெய்லர் ஏற்படுத்திய 6 மடங்கு முன்பதிவு உயர்வும்

டேக்-டூ இன்டராக்டிவ் நிறுவனம் சுமார் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவில் இந்த கேமை உருவாக்கியுள்ளதால் இது மிகவும் விலை உயர்ந்த பொழுதுபோக்குத் திட்டமாகக் கருதப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்ட நீட்டிக்கப்பட்ட டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அந்த டிரெய்லர் வெளியான பிறகு முன்பதிவுகள் ஆறு மடங்கு அதிகரித்ததாக சந்தை ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மல்டிபிளேயர் மோடு

2027-ல் எதிர்பார்க்கப்படும் பிசி (PC) பதிப்பு மற்றும் ஆன்லைன் மல்டிபிளேயர் மோடு

தொடக்க நாளிலேயே வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில் முதலீட்டாளர்களின் கவனம் இப்போது ஜிடிஏ 6 பிசி பதிப்பு மற்றும் ஆன்லைன் மோடு மீது திரும்பியுள்ளது.

வெளியீட்டிற்குப் பிறகும் தொடர்ச்சியான வருவாயை ஈட்டுவதற்கு ஆன்லைன் மல்டிபிளேயர் அனுபவம் முக்கியப் பங்காற்றும் என டேக்-டூ நிறுவனம் நம்புகிறது.

பிசி பதிப்பு மற்றும் ஆன்லைன் மோடு ஆகிய இரண்டும் 2027-ஆம் ஆண்டில் வெளியாகலாம் எனத் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை விஞ்சியுள்ளதன் மூலம் வீடியோ கேம் துறையின் வணிக வலிமையை ஜிடிஏ 6 உலகிற்கு உணர்த்தியுள்ளது.

ADVERTISEMENT