Loading...
வன்முறைக்கு பதிலாக பேச்சுவார்த்தையை தேர்ந்தெடுப்போம்: பஹல்காம் தாக்குதல் உயிரிழப்புகளுக்கு ஷாருக்கான் அஞ்சலி
மும்பை அமைதி விருது விழாவில் 26/11 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஷாருக்கான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வன்முறைக்கு பதிலாக பேச்சுவார்த்தையை தேர்ந்தெடுப்போம்: பஹல்காம் தாக்குதல் உயிரிழப்புகளுக்கு ஷாருக்கான் அஞ்சலி

எழுதியவர் Vasuki
Nov 22, 2026
05:52 pm

செய்தி முன்னோட்டம்

மும்பையில் சனிக்கிழமையான நேற்று (நவம்பர். 21) நடைபெற்ற 'குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026' (Global Peace Honours 2026) விழாவில் பங்கேற்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல், பஹல்காம் தாக்குதல் மற்றும் சமீபத்திய டெல்லி குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கும், நாட்டிற்காக உயிர்நீத்த வீரமிக்க பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் தனது உருக்கமான அஞ்சலியைச் செலுத்தினார். இந்நிகழ்வில் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த தேவிகா ரோட்டவானைச் சந்தித்த ஷாருக்கான், அவரது துணிச்சலையும் அனுபவத்தையும் பாராட்டி நெகிழ்ச்சியுடன் உரையாடினார்.

ஷாருக்கான் உரை

வெறுப்பை அன்பால் வெல்ல வேண்டும்

விழாவில் பேசிய ஷாருக்கான், தனது இளைய மகன் "வெறுப்பை எப்படி அன்பாக மாற்றுவது?" எனக் கேட்ட கேள்வியை நினைவுகூர்ந்தார்.

அதற்குத் தான் அளித்த பதிலைப் பகிர்ந்துகொண்ட அவர், "வன்முறைக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தையையும், பயத்திற்குப் பதிலாக நம்பிக்கையையும் தேர்ந்தெடுத்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் அன்பு எப்போதும் வெல்லும்" என்றார்.

அமைதி மற்றும் நல்லிணக்கம் என்பது ஒவ்வொரு குடிமகனும் தினமும் காக்க வேண்டிய பொறுப்பு என்றும், சாமானிய மனிதனின் சக்தியை ஒருபோதும் மறக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

டிசம்பர் 24-இல் கிங் வெளியீடு

ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் கவிதை

நிகழ்ச்சியில் நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் உருக்கமான கவிதை வரிகளை வாசித்த ஷாருக்கான், சாதி, மதம் மற்றும் பாகுபாடுகளை மறந்து மனிதநேயப் பாதையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடப்பதே நமது வீரர்களின் தியாகத்திற்குச் செய்யும் உண்மையான மரியாதை எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள பிரம்மாண்டத் திரைப்படமான கிங், வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT