Page Loader
சூர்யா- கார்த்திக் சுப்புராஜின் 'ரெட்ரோ' முதல் பாடல் வெளியானது

சூர்யா- கார்த்திக் சுப்புராஜின் 'ரெட்ரோ' முதல் பாடல் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2025
08:31 pm

செய்தி முன்னோட்டம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்துள்ள படம் 'ரெட்ரோ'. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. 'கண்ணாடி பூவே' என தொடங்கும் இப்படத்தின் முதல் பாடல், சந்தோஷ் நாராயணன் குரலில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

ரெட்ரோ படத்தின் விவரங்கள்

இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்பொழுது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்பு, படக்குழு 'தி ஃபர்ஸ்ட் ஷாட்' என்ற பெயரில் ஒரு சிறிய வீடியோ வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து சூர்யாவின் பிறந்த நாளில் முன்னோட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது. பிறகு, கடந்த டிசம்பரில் டைட்டில் டீசர் வெளியானது. இப்படம் மே 1ஆம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.