Page Loader
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்
பதவியேற்பு விழாவில், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 09, 2024
09:38 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக இன்று பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் பிரபலங்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியுடன் இணைந்து மந்திரி சபையில் இடம்பெறவுள்ள மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அக்‌ஷய் குமார், அனில் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

embed

பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்

டெல்லியில் நடைபெறும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் பங்கேற்பு!#SunNews | #NarendraModi | #PMModi | #Rajinikanth pic.twitter.com/6QxApeF3Dg— MOHAN K DMK NKL (@20101976M) June 9, 2024

embed

பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்

From #Rajinikanth to Shah Rukh Khan, Indian celebs attend the oath taking ceremony in Delhi.#ModiCabinet #OathCeremony Click here: https://t.co/n6Ga6U8cXj pic.twitter.com/BgJiwl0tiw— editorji (@editorji) June 9, 2024