
தளபதி விஜயின் GOAT FDFS காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும்: ஆனால் தமிழகத்தில் நிலை?
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT), செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் கிடையாது என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் இருப்பதனால், சிறப்பு காட்சி காலை 7 அல்லது 9 மணிக்கு மட்டுமே துவக்கப்படும்.
எனினும் அண்டை மாநிலங்களில், இன்னமும் அதிகாலை காட்சிகள் நடைமுறையில் உள்ளது.
அதன்படி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் GOAT படத்தில் FDFS காலை 4 மணிக்கே துவங்கவுள்ளது.
விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். அதனால் இந்த செய்தி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#GOAT FDFS timing update. First show in #US to start 4AM IST and #Karnataka & #Kerala also likely to start same time!
— Sreedhar Pillai (@sri50) August 27, 2024
தமிழ்நாட்டில் FDFS
தமிழகத்தில் சிறப்பு காட்சி இருக்குமா?
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்களை பார்ப்பதற்காக அதிகாலை தியேட்டருக்கு வந்த ரசிகர்களிடையே அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டதை அடுத்து அதிகாலை காட்சிகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் பெரிய நடிகர்கள் படங்களுக்கு ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்படும்.
அதுவும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே. அந்த வகையில் GOAT படத்திற்கும் சிறப்பு காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
GOAT படத்தில் முக்கிய வேடங்களில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.