Page Loader
GOAT படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்; மகாபலிபுரத்தில் நடைபெறும் ஷூட்டிங்
GOAT படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கௌரவ வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

GOAT படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்; மகாபலிபுரத்தில் நடைபெறும் ஷூட்டிங்

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2024
02:53 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் GOAT. இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியீட்டிற்கு திட்டமிட்டுள்ள படக்குழுவினர், இப்படத்திற்காக CG வேலைகளிலும் பிஸியாக இருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கௌரவ வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிளைமாக்ஸ் கட்சியில் இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறும் எனவும், இதற்காக மகாபலிபுரத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும் இணையத்தில் செய்திகள் கசிந்து வருகின்றன. இது ஒரு வேளை உண்மையாக இருப்பின், விஜய் உடன் முதல்முறையாக இணைகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே GOAT திரைப்படத்தில் பிரபு தேவா, பிரஷாந்த், மைக் மோகன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

embed

GOAT படத்தில் சிவகார்த்திகேயன்

Exclusive 🚨:- Actor #Sivakarthikeyan doing a Cameo Role in #GreatestOfAllTime 🤩🌟 Final Shoot Schedule going on Full Fledge🔥#Thalapathy | #VenkatPrabhu | #GOAT pic.twitter.com/QwKKneCMGL— SillakiMovies (@sillakimovies) May 8, 2024