தீபாவளி ரேஸில் 5 படங்கள் ரிலீஸ்: உச்ச நட்சத்திரங்கள் இல்லாத நிலையிலும் எகிறும் எதிர்பார்ப்பு
செய்தி முன்னோட்டம்
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களோடு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா காலம் தொட்டு எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் மற்றும் விஜய் - அஜித் வரை தொடர்ந்த இந்த தீபாவளி ரிலீஸ் மோகம், தமிழ் சினிமா வணிகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு தீபாவளிப் போட்டியில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகாதது ரசிகர்கள் மத்தியில் சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய கதாநாயகர்களின் படங்கள் இல்லாவிட்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஐந்து முக்கியத் திரைப்படங்கள் இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டித் திரைக்கு வரவுள்ளன.
பட ரிலீஸ்
தீபாவளிப் போட்டியில் 5 பிரம்மாண்ட படங்கள்
ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் நவம்பர் 5 அன்று வெளியாகிறது.
சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சீன்' திரைப்படம் நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தந்தை - மகள் பாசப் பின்னணியில் விஜய் ஆண்டனி நடித்துள்ள குடும்பத் திரைப்படமான 'அப்பா குட்டி' அதே நாளில் களம் காண்கிறது.
பிரபுதேவா நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'Moon Walk' திரைப்படமும் நவம்பர் 6-ஆம் தேதியை குறிவைத்து ரிலீஸாகவுள்ளது.